| ADDED : மே 06, 2024 05:57 AM
புவனகிரி, : மேல்புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகங்களில் பழைய வாகனங்கள் பராமரிப்பின்றி மக்கி வீணாகி வருகிறது.மேல்புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளான சேர்மன்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாகனங்கள் பழுதடைந்த நிலையில் இரு ஒன்றியங்களிலும் சேர்மன் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் அரசு சார்பில் வழங்கினர்.பழைய வாகனங்கள் முறையான பராமரிப்பின்றி ஓரம் கட்டியுள்ளனர். இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில், மக்கி வீணாகி வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, வீணாகும் வாகனங்களை பொது ஏலம் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.