உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரேக் பிடிக்காத அரசு பஸ்: சாதுர்யமாக நிறுத்திய டிரைவர்

பிரேக் பிடிக்காத அரசு பஸ்: சாதுர்யமாக நிறுத்திய டிரைவர்

கூடலுார் : குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு தமிழக அரசு பஸ் நேற்று மதியம் 2:00 மணிக்கு, 68 பயணியருடன் கிளம்பியது. மலைப்பாதையில் எஸ் வளைவு அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென, 'பிரேக்' பிடிக்காமல் பஸ் தாறுமாறாக ஓடியது.அப்போது, டிரைவர் சென்றாயன் சாமர்த்தியமாக சாலையின் ஓரத்தில் இருந்த பாறையில் மோதி பஸ்சை நிறுத்தினார்.மலை இறக்கத்தில் வேகமாக வந்ததால், பஸ்சின் முன்பகுதி முழுதும் சேதம் அடைந்தது. கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. பஸ் திரும்புவதற்கு முன், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் பலர் உயிரிழந்திருப்பர்.கடந்த, மே 9ல் போடி அரசு போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ், மலைப்பாதையில் ஆக்சில் கட்டாகி, பள்ளத்தில் கவிழாமல் அதிர்ஷ்டவசமாக சாலையிலேயே நிறுத்தப்பட்டது.நேற்றும் 68 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். குமுளி மலைப்பாதையில் இயக்கப்படும் காயிலாங்கடை 'டப்பா' பஸ்களை மாற்ற வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை