உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மயான ஆக்கிரமிப்பு : ஆர்.டி.ஓ.,விடம் மனு

மயான ஆக்கிரமிப்பு : ஆர்.டி.ஓ.,விடம் மனு

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே மயானத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு கொடுத்தனர்.விருத்தாசலம் அடுத்த கார்குடல் ஊராட்சி, கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், ஆர்.டி.ஓ.,வை சந்தித்து மனு அளித்தனர். அதில், விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த நாங்கள், முன்னோர் காலத்தில் இருந்து தட்டான்சுல்லை என பெயர் கொண்ட மயானத்தில் இறுதி சடங்கு செய்து வருகிறோம்.தரிசாக உள்ள இந்த இடத்தை தனிநபர் ஆக்கிமித்துள்ளார். எனவே, மயானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை