உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனந்தீஸ்வரன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா 

அனந்தீஸ்வரன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா 

சிதம்பரம் : சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. குரு பகவான், மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நேற்று முன்தினம் பெயர்ச்சியனார். அதனையொட்டி, சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. குரு சன்னதியில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோவிலில் உள்ள நடராஜர், அனந்தீஸ்வரன், சவுந்திர நாயகி அம்பாள் ஆகியோருக்கு சாயரட்ச பூஜை , அஷ்டமி பைரவருக்கு அபிஷேகங்கள் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜ்குமார், ராஜா குருக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி