உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து 9 சவன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 9 சவன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டின் ஜன்னலை அறுத்து, 9 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மங்கலம்பேட்டை அடுத்த டி.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ேஷக் இக்பால், 42; வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி நஸ்ரின், சகோதரி மும்தாஜ் ஆகியோர் தனது குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலை நஸ்ரின் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 9 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய், வெள்ளி பொருட்கள் மற்றும் 2 மொபைல் போன்கள் திருடு போனது தெரியவந்தது.தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், கடலுாரில் இருந்து மோப்பநாய் ஹூப்பர் வரவழைக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ