உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து 9 சவரன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 9 சவரன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டின் ஜன்னலை அறுத்து, 9 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த டி.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ேஷக் இக்பால், 42; வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி நஸ்ரின், சகோதரி மும்தாஜ் ஆகியோர் தனது குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.நேற்று காலை நஸ்ரின் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 9 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் வெள்ளி பொருட்கள் மற்றும் 2 மொபைல் போன்கள் திருடு போனது தெரியவந்தது.தகவலறிந்துவந்த மங்கலம்பேட்டை போலீசார், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், கடலுாரில் இருந்து மோப்பநாய் ஹூப்பர் வரவழைக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி