உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி பிரிந்து சென்றதால் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை 

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை 

கடலுார்: குடும்பத் தகராறில் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் நத்தவெளி ரோட்டைச் சேர்ந்த லட்சுமணன் மகன் தாமோதரன் 34; கொத்தனார். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி அனுஷியா 32; தாமோதரன் தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். உறவினர்கள் கண்டித் தும் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை.இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அனுஷியா, தனது மகளுடன், மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தாமோதரன் கடந்த 10ம் தேதி வீட்டில் மனைவியின் புடவையால் துாக்குப்போட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை