உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தகராறில் கணவர் சாவு மனைவி போலீசில் புகார்

தகராறில் கணவர் சாவு மனைவி போலீசில் புகார்

கிள்ளை : கிள்ளையில், கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.கிள்ளை கூழையார் ஆரியநாட்டு தெருவை சேர்ந்தவர் அருண்குமார், 35; இவரது, மனைவி சுகன்யா, 30; இருவரும் கடந்த 25ம் தேதி அதே பகுதியில் உள்ள சுகன்யாவின் தாய் வீட்டில் டி.வி., பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன், அருண்குமாரை வெளியில் அழைத்து சென்று நெட்டி தள்ளியதில் அருண்குமார் கீழே விழுந்துள்ளார்.அருண்குமார், சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கியிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அருண்குமார் இறந்தார்.இதுகுறித்து, அருண்குமார் மனைவி சுகன்யாவின் புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர், சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை