| ADDED : ஏப் 27, 2024 04:30 AM
விருத்தாசலம் : 'ஆலிச்சிகுடி, இளமங்கலம், பேரளையூர், மணவாளநல்லுார் கிராம மக்களுக்கு, என்றும் உறுதுணையாக இருப்பேன்' என பா.ஜ., ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் கூறினார்.விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலர், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:ஒன்றிய கவுன்சிலர் நிதியில் ஆலிச்சிகுடி மயானத்தில் 6 லட்சம் ரூபாயில் போர்வெல் அமைத்து, குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்துள்ளேன். 5 லட்சம் ரூபாயில் பேவர் பிளாக் ரோடு போடப்பட்டுள்ளது. 7 லட்சம் ரூபாயில் நாடக மேடை கட்டப்பட்டுள்ளது.இளமங்கலம் கிராமத்தில் 3 லட்சத்தில் குடிநீர் குழாய்கள், ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாயில் பேவர் பிளாக் ரோடு போடப்பட்டுள்ளது.கலெக்டர் ஒத்துழைப்புடன் 14 கோடி ரூபாயில் பிரதமர் நிதியில் நரி ஓடையில் தடுப்பணையுடன் கூடிய ெஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக எனது சொந்த நிலத்தில் பாதை அமைத்துக் கொடுத்துள்ளேன்.மேலும், இளமங்கலம் கிராமத்திற்கு 7 லட்சத்தில் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. பேரளையூரில், 3 லட்சத்தில் பேவர் பிளாக் ரோடு, 7 லட்சத்தில் ஆலந்துறைப்பட்டு செல்லும் வழியில் குளம் துார் வாரப்பட்டுள்ளது.வரும் காலங்களில் இளமங்கலம், சாத்துக்கூடல் கீழ்பாதி பட்டியலின மக்களின் நீண்டகால கோரிக்கையான மயான பகுதியில் சாலை போடப்படும். மேலும், ஒரு நாடக மேடை, காத்திருப்போர் நிழற்கூடம், கருமகாரிய கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.இளமங்கலம், ஆலிச்சிகுடி, பேரளையூர், மணவாளநல்லுார் கிராம மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். மக்களோடு மக்களாக தோள் கொடுப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.