உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளோபல் சிறப்பு பள்ளியில்வாழ்வாதார மையம் திறப்பு

குளோபல் சிறப்பு பள்ளியில்வாழ்வாதார மையம் திறப்பு

கடலுார்: கடலுார் குளோபல் சிறப்பு பள்ளியில் வாழ்வாதார மையம் திறப்பு விழா நடந்தது.கடலுார் சுப்ராயலு நகரில் குளோபல் தொண்டு நிறுவனம் மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் வயது வந்த பெண்களுக்கான உண்டு உறைவிட சிறப்பு பள்ளி, தொழிற்பயிற்சியுடன் கூடிய மறுவாழ்வு இல்லத்தை நடத்தி வருகிறது.இங்கு வாழ்வாதார மையம் திறப்பு விழா நடந்தது. விழாவில், குளோபல் நிறுவனத் தலைவர் குமுதம் தலைமை தாங்கினார். விரிவாக்க மேலாளர் பீட்டர் ஜோசப் வரவேற்றார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு வாழ்வாதார மையத்தை திறந்து வைத்து, முந்திரிகொட்டை உடைத்தல் தொழிலை துவக்கி வைத்தார். குளோபல் நிர்வாக இயக்குநர் கோபால், 'வரும் 2025ம் ஆண்டிற்குள் கடலுார் மாவட்டத்தில் 500 மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என்றார். ஏற்பாடுகளை செயல் மேலாளர் கிறிஸ்டோபர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை