உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அருணாச்சலா பள்ளியில் சுதந்திர தின விழா

அருணாச்சலா பள்ளியில் சுதந்திர தின விழா

வடலுார் : குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் கொடியேற்றினார். செயலர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். பள்ளி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், இயக்குனர்கள் வேலு, பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், குமார், திராவிடஅரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார்.துணை முதல்வர் அபிராமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ