| ADDED : மே 03, 2024 11:57 PM
கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜைகள் துவங்கியது. கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலாலயம் (திருப்பணிகள்) துவங்குவதை முன்னிட்டு நேற்று தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவசனம், வாஸ்து சாந்தி நடந்தது. இன்று (4ம் தேதி) காலை 8:30 மணிக்கு நவக்கிரக கலச பூஜை ேஹாமம், கோ பூஜை, மாலை 4:30 மணிக்கு மண்டப வேதிகை பூஜை நடக்கிறது. நாளை 5ம் தேதி காலை 7:00 மணிக்கு சோம பாலிகா பூஜை, மண்டப பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.