உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் திட்ட பணிகள் இணை இயக்குனர் ஆய்வு

வேளாண் திட்ட பணிகள் இணை இயக்குனர் ஆய்வு

கடலுார்,: குமராட்சி வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகளை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். குமராட்சி வட்டாரத்தில் உளுந்து, பச்சை பயிறு 25,250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, 45 நாட்கள் கடந்துள்ளது. இங்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் ஆய்வு செய்தார்.அப்போது, பழனிராஜா வயலில் ஒரு ஏக்கருக்கு நேனோ டிஏபி 500 மில்லியனை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ட்ரோன் மூலமாக இலை வழி தெளிப்பு பணியை ஆய்வு செய்து, பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்வேல், வேளாண்மை அலுவலர் சிந்துஜா, துணை அலுவலர் தெய்வசிகாமணி, உதவி விதை அலுவலர் ராமச்சந்திரன், உதவி அலுவலர் பிரகாஷ், தொழில்நுட்ப மேலாளர்கள் கல்பனா, பிரகாஷ், எட்வின் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை