உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் துணை இயக்குனர் ஆய்வு

வேளாண் துணை இயக்குனர் ஆய்வு

வடலுார்: குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் கடலுார் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பிரேம்சாந்தி ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பிரேம்சாந்தி குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இடுபொருள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர்' காப்போம் திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பசுந்தால் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.எல்லப்பன்பேட்டை கிராமத்தில் விதைப்பு செய்யப்பட்டுள்ள பசுந்தால் உர வயல்களை ஆய்வு செய்தார். குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மலர்வண்ணன், வேளாண்மை அலுவலர் வேல்முருகன் உட்பட பலரும் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை