உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகை பறிப்பு, வாகன திருட்டு: சிதம்பரத்தில் வாலிபர் கைது

நகை பறிப்பு, வாகன திருட்டு: சிதம்பரத்தில் வாலிபர் கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில் பைக் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஏழரை சவரன் நகை மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.சிதம்பரம், முத்தையா நகரில், கடந்த மே மாதம் தனலட்சுமி என்ற பெண்ணிடமும் மணி ஒருவரிடமும் மூனரை சவரன், கடந்த ஜூலை 15ம் தேதி மாரியப்பா நகரில், ஆசிரியை சாந்தி என்பவரிடம் 4 சவரன் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன.கடந்த மாதம் இடையன்பால்சேரியை சேர்ந்த தனுஷ்குமார், வடக்கு மாங்குடி இமையச்செல்வன் ஆகியோரின் பைக்குகள் திருடு போனது.இது தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், லெனின் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.திருட்டு நடந்த இடம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதனிடையே அண்ணா மலை நகர் கலுங்குமேட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையின் ஈடு பட்டபோது, அந்த வழியாக பைக்கில் வந்த மதுராந்தகல்லுார், தேவங்குடி பகுதியை சேர்ந்த அருணகிரி மகன் ஹரிஷ், 24, என்பவரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர்.செயின் பறிப்பு மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டது, அவர் தான் என தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து ஹரிைஷ கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏழரை சவரன் நகை மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !