உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி என்.எல்.சி., ஊழியர் வீட்டில் நகை, பணம், கார் திருட்டு

மாஜி என்.எல்.சி., ஊழியர் வீட்டில் நகை, பணம், கார் திருட்டு

நெய்வேலி : ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர் வீட்டில், நகை, பணம் மற்றும் காரை திருடிச் சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.நெய்வலி ஆர்ச் கேட் எதிரில் உள்ள அசோக் நகர் விரிவாக்கதை சேர்ந்தவர் ரகுகுமார்,62; ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர். கடந்த 18ம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூருவிற்கு சென்றவர், நேற்று முன்தினம் இரவு வந்தபோது, வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த மாருதி ஸவிப்ட் கார் இல்லாததால் திடுக்கிட்டார். வீட்டின் முன் கதவு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 9 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ