உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருணாநிதி பிறந்தநாள் விழா தி.மு.க., இனிப்பு வழங்கல்

கருணாநிதி பிறந்தநாள் விழா தி.மு.க., இனிப்பு வழங்கல்

விருத்தாசலம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, விருத்தாசலத்தில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.விருத்தாசலம் நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் அரங்கபாலகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் செங்குட்டுவன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், நகர பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் ராமு வரவேற்றார்.நகர்மன்ற சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிர்வாகிகள் குரு சரஸ்வதி, அறிவுடைநம்பி, குமார், தளபதி, மணிவண்ணன், கவுன்சிலர் வெங்கடேசன், குமார், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர்கள் ரவிச்சந்திரன், இளங்கோவன், கவுன்சிலர்கள் உஷா பாலு, முத்துக்குமரன், அருள்மணி செந்தில், அறிவழகி முருகன், தீபா மாரிமுத்து, சீனிவாச காந்தி, பரந்தமான், விக்கி, கிருஷ்ணராஜ், பாலா, கார்த்திக், நிஷாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல், ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், பஸ் நிலையம், பெரியார் நகர், ராமச்சந்திரன்பேட்டை உட்பட்ட 33 வார்டுகளிலும் தி.மு.க., கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி