| ADDED : மே 06, 2024 06:05 AM
விருத்தாசலம், : வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கெங்கையம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தில் உள்ள கெங்கையம்மன், மாரியம்மன், மாயவன், குள்ளகருப்பர், வீரபத்திர் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வாக அக்னி திருவிழா, செடல் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் தீச்சட்டி சுமந்தும், செடல் அணிந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.