உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூனங்குறிச்சி பொதுமக்கள் மனு

கூனங்குறிச்சி பொதுமக்கள் மனு

கடலுார்: என்.எல்.சி., காலி மனையில் குடியிருக்க கால அவகாசம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில், கூனங்குறிச்சி மக்கள் மனுகொடுத்தனர்.விருத்தாசலம் அடுத்த கூனங்குறிச்சியை சேர்ந்த வெற்றிவேல் தலைமையில்கொடுத்துள்ள மனு;நான் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. எனக்குதிருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். என்.எல்.சி., மாற்றுக்குடியிருப்பில் கடந்த 38ஆண்டுகளாக குடிசைபோட்டு மண்ணெண்னை விளக்கில் வசித்து வருகிறேன். 48ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி., நிறுவனம் நிலம் கையகப்படுத்திமாற்றுக்குடியிருப்பு வழங்கியது. அதில், உள்ள 6 காலி மனையில் 6 குடும்பங்கள்வசிக்கின்றனர். இந்நிலையில், என்.எல்.சி., நிர்வாகம் எங்கள் இடங்களை காலிசெய்யுமாறு அறிவிப்பு கடிதம் கொடுத்துள்ளது. இதனால், நாங்கள் எங்கு செல்வதுஎன தெரியாமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றோம். எனவே, என்.எல்.சி., நிர்வாகத்திடம் இருந்து வேறு காலி மனை மற்றும் காலிசெய்வதற்கு கால அவகாசம் பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ