உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரர் அறக்கட்டளை மாணவர்களுக்கு பாராட்டு

ராகவேந்திரர் அறக்கட்டளை மாணவர்களுக்கு பாராட்டு

புவனகிரி, ; ராகவேந்திரர் ஆலய புனித தொண்டு அறக்கட்டளை சார்பில் புவனகிரி தாலுகாவில் உள்ள 20 பள்ளிகளில் அரசு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.புவனகிரி புனித தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசு வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான விழா புவனகிரி ராகவேந்திரா கோவில் வளாகத்தில் நடந்தது.18 பள்ளிகளைச் சேர்ந்த 125 மாணவர்கள் மற்றும் சிறப்பாக சேவை செய்த 20 பள்ளிகளை சேர்ந்த ஆசியர்களுக்கு அறக்கட்டளை தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன்,பொருளாளர் கதிர்வேலு ஆகியோர் பரிசு வழங்கி வாழ்த்தினர். மாணவ,மாணவியர் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ