உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பனை பழ மாலையுடன் தொழிலாளி மனு

பனை பழ மாலையுடன் தொழிலாளி மனு

கடலுார் : கடலுார் பெண்ணையாற்றங்கரையில் பனை விதைகளை நடவு செய்யக் கோரி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பனம் பழங்களை மாலையாக அணிந்து தொழிலாளி மனு அளித்தார்.கடலுார், சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்த கருணாகரன், பனம் பழங்களை மாலையாக அணிந்து கொண்டு, கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு வந்தார். அவர், டி.ஆர்.ஓ., ராஜசேகரனிடம் அளித்த மனு: கடலுார், பெண்ணையாற்றில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 7 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பெண்ணையாற்றின் கரையில் பனை விதைகளை நடக்கோரி மனு அளித்தேன். பனை விதைகளை நடுவதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ஓராண்டு முடிவடைந்தும், பனை விதைகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. பனை விதைகளை நடவு செய்தால் வெள்ள காலங்களில் கரையில் உடைப்பு ஏற்படாது. எனவே, இனியாவது பனை விதைகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை