மேலும் செய்திகள்
வி.சி., கட்சி கொடி அகற்றம் கடலுார் அருகே மறியல்
08-Aug-2024
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் புதுச்சேரி மாநில மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார், கேப்பர் மலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறையின் பின்புற சுவர் அருகே உள்ள சாலையில் இருந்து மர்ம நபர்கள் ஒரு மூட்டையை சிறைக்குள் வீசியுள்ளனர். சத்தம் கேட்டு, காவலர்கள் சென்று, அங்கு கிடந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது, 90 மில்லி அளவுள்ள 15 புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.இது குறித்து சிறை கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.நள்ளிரவில் மர்மநபர்கள், சிறைக்குள் மதுபாட்டில் வீசிய சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08-Aug-2024