உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி

இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி

புவனகிரி : புவனகிரி தமிழ்ப்பேரவையின் சார்பில் 133 வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.புவனகிரி தமிழ்ப்பேரவையின் சார்பில் மாதம் தோறும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மொழி நடை மற்றும் ஒலி,ஒளி வேறுபாடு உள்ளிட்ட தன்மைகளை தெரிந்து கொள்கின்றனர். தற்போது 133வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி பாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. பேரவை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். துணை செயலர் கிருஷ்ணன் வரவேற்றார்.சங்க இலயக்கிய அமுதம் 'வலம்படு வாய்வாள்' என்தொடங்கும் புறநானுாற்றில் 91வது பாடல் குறித்து, கீழ்புவனகிரி பார்வதி மாணிக்கவாசகம், திருக்குறள் அமுதத்தில் குணமென்னும் குன்றேறி, எனவத்தொடங்கும் 29வது பாடல் குறித்து, முனைவர் இரா.அன்பழகன் பேசினர். பேரவை பொருளாளர் ஜெகன் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை