உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 81 வயதில் எம்.ஏ., தேர்வு விருதை முதியவர் அசத்தல்

81 வயதில் எம்.ஏ., தேர்வு விருதை முதியவர் அசத்தல்

திட்டக்குடி : விருத்தாசலத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர், எம்.ஏ.,பட்டப்படிப்பு தேர்வு எழுதி அசத்தினார்.விருத்தாசலத்தை சேர்ந்தவர் வீரராகவன்,81; தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி 2001ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பள்ளி படிப்பை மட்டும் முடித்திருந்த இவர், ஓய்வுக்குப்பின் கடந்த 2002ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகம் வாயிலாக பி.ஏ.,ஆங்கிலம் பட்டப்படிப்பை படித்து முடித்தார். அதன்பின் தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., ஆங்கிலம் பட்டப்படிப்பில் சேர்ந்தார். தற்போது திட்டக்குடி கல்வி மையத்தில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் கடந்த 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அதில் வீரராகவன் பங்கேற்று, எம்.ஏ., முதலாம் ஆண்டு தேர்வுகள் எழுதி வருகிறார். 81 வயதில் வீரராகவனின் ஆர்வத்தைப் பார்த்த சக மாணவர்கள் மற்றும் தொலைக்கல்வி மைய பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கல்விக்கு வயது தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 81வயது முதியவர் எம்.ஏ., தேர்வு எழுதியது மாணவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்