உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டு அரசு பள்ளிக்கு ரூ. 28 லட்சத்தில் பொருட்கள்

நடுவீரப்பட்டு அரசு பள்ளிக்கு ரூ. 28 லட்சத்தில் பொருட்கள்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 28 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது.நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, சி.எஸ்.ஆர்.,திட்டத்தின் மூலம் பேங்க்ஸ் டெக்னாலஜி நிறுவனம் மூலம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சந்தோஷம் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். மொபைல் நிறுவன இயக்குனர் குகன் பள்ளிக்கு தேவையான தளவாட பொருட்களை வழங்கினார்.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் வாழ்த்துரை வழங்கினார்.தளவாட பொருட்களை பெற்றுத்தர முயற்சி செய்த பள்ளியின் முன்னாள் மாணவர் கணபதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.உதவி தலைமை ஆசிரியர் தரணிதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை