உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூட்டிய வீடுகளில் நகை திருடியவர் கைது

பூட்டிய வீடுகளில் நகை திருடியவர் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுாரை சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் செந்தில் முருகன்,30; என்பர், சிதம்பரம் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.அதன்பேரில் சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து செந்தில்முருகனை கைது செய்து, அவரிடமிருந்து 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ