உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசுப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

அரசுப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

குள்ளஞ்சாவடி, - குள்ளஞ்சாவடி அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்ததுதமிழக அரசின் ஆணைக்கிணங்க பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மை குழு அறிமுக கூட்டம் நடந்தது. இதில், 40க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் பள்ளியின் எதிர்கால கட்டமைப்பு குறித்த ஆய்வு தகவல்களை, பெற்றோர்கள் மத்தியில் பேசினார். பெற்றோர் சார்பில் மாணவர்கள் நலன் குறித்த தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ