உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயியை மிரட்டி நகை கொள்ளை முகமூடி கொள்ளையர் அட்டூழியம்

விவசாயியை மிரட்டி நகை கொள்ளை முகமூடி கொள்ளையர் அட்டூழியம்

ஸ்ரீமுஷ்ணம்: வீடு புகுந்து விவசாயியை கத்தியை காட்டி மிரட்டி நகையை திருடிச் சென்ற மூகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாவடிக்குப்பத்தை சேர்ந்தவர் பெரியநாயகசாமி, 57; விவசாயி. இவரது மனைவி மற்றும் மகன், மகள் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். பெரியநாயகசாமி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு முகமூடி அணிந்த இருவர் வீடு புகுந்து, பெரியநாயகசாமியிடம் கத்தியை காட்டி மிரட்டி , பீரோ சாவியை வாங்கி லாக்கரில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு, பீரோவை பூட்டி சாவியுடன் தப்பிச் சென்றனர்.பெரியநாயகசாமியின் மனைவி ஆரோக்கியமேரி சென்னையில் இருந்து வந்து பார்த்தபோது, பீரோ லாக்கரில் வைத்திருந்த 10 கிராம் நகைகள் மட்டும் திருடு போனதும், பீரோவில் வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்த 7 சவரன் நகைகள் தப்பியது தெரிய வந்தது. புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து, முகமூடி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ