| ADDED : மே 02, 2024 11:17 PM
கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் அறிஞர் அண்ணா தனியார் பஸ் மற்றும் பொது போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா நடந்தது.சங்கத்தின் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி, போக்குவரத்து விதிகள் குறித்து பேசினார்.சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வாழ்த்திப் பேசினார். விழாவில், இணை ஒருங்கிணைப்பாளர் திருவரசன், தர்மராஜ், கஜேந்திரன், சண்முகம் பங்கேற்றனர்.