உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டு மனை கேட்டு மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்

வீட்டு மனை கேட்டு மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரத்தில், வீடு இழந்தவர்களுக்கு மனை பட்டா கேட்டு மா.கம்யூ., சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.சிதம்பரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி நீர் நிலை பகுதிகளில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. அதில், தில்லையம்மன் ஓடை, ஞானபிரகாசம் குளக்கரை, அண்ணா தெரு, அம்பேத்கர் நகர், பாலமான் வாய்க்கால் பகுதி உட்பட பல பகுதிகளில் 250க்கும் மேற்பட்டோரின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க கோரி மா.கம்யூ., கட்சியினர் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சப் கலெக்டர் ராஷ்மிராணி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடந்தது. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், வீடுகளை இடித்து, 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. அவர்களுக்கு உடனடியாக நிரந்தர இடம் வழங்குவதற்கான ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம். தற்போது சில பகுதிகளில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள இடத்திலும், மாற்று இடம் வழங்கிய பின்னரே வீடுகளை இடிக்க வேண்டும்' என்றார்.அதற்கு பதில் அளித்த, சப் கலெக்டர், 'ஏற்கனவே பார்த்த இடம் ஒப்புதல் வழங்கப்படவில்லை. தற்போது மணலுாரில் உள்ள நகராட்சி பகுதியில் இடம் ஒதுக்குவதற்காக கலெக்டரிடம் பேசியுள்ளோம். 3 மாதத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ