உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ம.தி.மு.க., ஆண்டு விழா

ம.தி.மு.க., ஆண்டு விழா

கடலுார் : ம.தி.மு.க., 31வது ஆண்டு துவக்க விழாவை யொட்டி கடலுாரில் கருவேல மரங்களை அகற்றி, மரம் நடுவிழா நடந்தது.ம.தி.மு.க., துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்து 31வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையொட்டி கடலுார் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., சார்பில், கடலுார் பாதிரிக்குப்பம், அன்னை தெரசா நகரில் சீமை கருவேல மரங்களை அகற்றி விட்டு அந்த இடத்தில், புதிய மரக்கன்றுகள் நடப்பட்டது. ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டார். பொதுக்குழு உறுப்பினர் குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ