| ADDED : ஜூலை 06, 2024 05:04 AM
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென, அக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ ஆணைக்கினங்க கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், வரும் 15ம் தேதி முதல், 30ம் தேதி வரை செயல்வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர் தணிக்கை குழு உறுப்பினர் வக்கீல் பாபு பங்கேற்று பேசுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.