உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் சுதா ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ரத்தினசபாபதி, ஊராட்சி செயலர் குமார், துணை தலைவர் சங்கர், வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.பெண்ணாடம் கால்நடை மருந்தக மருத்துவர் சங்கவை, கால்நடை ஆய்வாளர் பொன்வேலன் ஆகியோர் கொண்ட குழுவினர் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.முன்னதாக, கோடை காலத்தில் கால்நடைகளை எவ்வாறு வளர்ப்பது, பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை