உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் வாக்காளர்களுக்கு அமைச்சர் கணேசன் நன்றி

கடலுார் வாக்காளர்களுக்கு அமைச்சர் கணேசன் நன்றி

சிறுபாக்கம் : காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு அமைச்சர் கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் கூறியதாவது:கடலுார் லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாக்களித்த திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அதுபோல், இரவு பகல் பாராமல் உழைத்த தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை செயலாளர்கள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இண்டியா கூட்டணி நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ