விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலடியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த முகாம் காணொளி காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.டி.ஆர்.ஓ., ராஜசேகர், எஸ்.பி., ராஜாராம், எம்.பி., விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.,க்கள் விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், நெய்வேலி சபா ராஜேந்திரன், கடலுார் அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.கூடுதல் கலெக்டர் சரண்யா வரவேற்றார். அமைச்சர் கணேசன் பங்கேற்று, 331 பயனாளிகளுக்கு, 5 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 146 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.இதில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல், தாசில்தார் உதயகுமார், ஒன்றிய சேர்மன் மலர், ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை, அனைத்து துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், தி.மு.க., காங்., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.சையத் மெஹ்மூத் நன்றி கூறினார்.