உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குரங்குகள் தொல்லை பொதுமக்கள் அவதி

குரங்குகள் தொல்லை பொதுமக்கள் அவதி

புவனகிரி, : புவனகிரி அடுத்த தம்பிக்கு நல்லாம்பட்டினம் பகுதியில் குரங்கு தொல்லை அதிகரிப்பால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.தம்பிக்கு நல்லாம்பட்டினம் பகுதியில் குரங்குகள் அதிகரித்துள்ளது. இவைகள் குடியிருப்பு வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து துவசம் செய்வதுடன், மா, தென்னை மற்றும் வாழை மரங்களில் உள்ள பிஞ்சுகளை சேதமாக்கி வருகிறது. அதுமட்டுமின்றி, சாலையில் சுற்றித் திரிவதுடன், கடலுார் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக கூட்டமாக ஓடுவதுடன், சாலையில் படுத்துக் கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதியும், வாகன ஓட்டிகள் நலன் கருதியும், சம்பந்தப்பட்டவர்கள் இப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து காப்பு கட்டில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ