உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையத்தில் கொசு ஒழிப்பு பணி

சி.என்.பாளையத்தில் கொசு ஒழிப்பு பணி

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சியில், மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்பேரில், டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.ஊராட்சி தலைவர் மங்களம் வேல்முருகன் தலைமை தாங்கினார். நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமிர்தாதேவி தலைமையில் மாவட்ட மலேரியா அலுவலர் மூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ், சுகாதார ஆய்வாளர் குமார், சுந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வீடு, வீடாக சென்று டெங்கு புழுக்களை கண்டறிந்து அழித்தனர்.மேலும் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த புகை மருந்து தெளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை