மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள்
விருத்தாசலம் மணலுார் டவுன் ரயில் நிலையம் வழியாக திருச்சி - சென்னை மார்க்கமாக ரயில்கள் செல்லும்போது, கேட் மூடப்படுவதை தவிர்க்கும் வகையில், கடந்த 2014ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இவ்வழியாக வேப்பூர், கள்ளக்குறிச்சி, ஆத்துார், சேலம் மார்க்கமாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், பாலத் தின் பில்லர்களை இணைக்கும் இரும்பு இணைப்புகள் பெயர்ந்து, ஆங்காங்கே கம்பிகள் வெளியே தெரிகின்றன. இப்பகுதியை வாகனங்கள் கடக்கும்போது பலத்த சப்தம் எழுப்பியும், அதிர்வையும் ஏற்படுத்துகின்றன.இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் திசைமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுபோல், வயலுார் ரயில்வே மேம்பாலத்திலும் இணைப்புகள் பழுதாகி உள்ளன. எனவே, மணலுார், வயலுார் ரயில்வே மேம்பால இணைப்புகளை சீரமைத்திட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.