உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் விமான சேவை அமைச்சரிடம் எம்.பி., மனு

நெய்வேலியில் விமான சேவை அமைச்சரிடம் எம்.பி., மனு

நெய்வேலி: நெய்வேலி விமான நிலையத்தை மேம்படுத்தி விரைவில், சேவையை துவங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.நெய்வேலியில் உள்ள 'பிரவுன் பீல்ட்' விமான நிலையத்தில், சிறிய டெர்மினல் கட்டடம், விமானங்களை நிறுத்த ஏப்ரான், டாக்ஸிவே மற்றும் ஓடுபாதை ஆகியவை தயார் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் விமான சேவை துவங்கப்படவில்லை. தற்போது சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே சிக்னல் சேவைகள் குறித்து கண்காணிப்பு பணி நடக்கிறது.இந்நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து, நெய்வேலி விமான நிலையத்தை உதான் திட்டத்தின் கீழ் விரைவாக மேம்படுத்தி, பொது மக்களுக்கு விமான சேவையை வழங்க வேண்டும் என கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத் மனு கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை