உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் மக்களுக்கு வயிற்று போக்கு நகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து நடவடிக்கை

நெல்லிக்குப்பம் மக்களுக்கு வயிற்று போக்கு நகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து நடவடிக்கை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஜீவா நகரில் பலர் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட பகுதியை கமிஷனர் பார்வையிட்டு மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுத்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சி ஜீவா நகரில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இதில் அப்பகுதி தி.மு.க.கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவர் சீனிவாசன் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த சில நாட்களாக வயிற்று போக்கால் பாதித்துள்ளனர்.இவர்கள் தொடர்ந்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரோலியாக நேற்று கமிஷனர் கிருஷ்ணராஜன் அந்த பகுதிக்கு சென்று குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.மேலும் குடிநீரை பரிசோதனை செய்து பார்த்து, நகர ஆரம்ப சுகாதர நிலைய டாக்டர் இந்திராகாந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று மக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினர். அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளித்தனர்.இன்ஜினியர் வெங்கடாஜலம்,துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ