| ADDED : ஜூன் 08, 2024 04:35 AM
கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், வேலையில்லா இசை ஆசிரியர்கள் பதிவுமூப்பு அடிப்படையில் பணி வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.சிதம்பரத்தை சேர்ந்த சசிகலா தலைமையில் வேலையில்லா இசை ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:கடலுார் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள், 2000ம் ஆண்டு இசை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு இதுவரை வேலையில்லாமல் உள்ளோம். கடந்த 2005-2006ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி, பதிவுமூப்பு அடிப்படையில் இசை ஆசிரியர்களை தேர்வு செய்தார். இதையடுத்து, பதிவுமூப்பு அடிப்படையில் பணி வழங்கப்பட வில்லை பகுதிநேர ஆசிரியர் பணியிலும் எங்களுக்கு பணி வழங்கவில்லை. எங்களைவிட வயது சிறியவர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டு பணிபுரிகின்றனர். பதிவுமூப்பு மற்றும் கல்வித்தகுதி இருந்தும், எங்களுக்கு வேலை இல்லை. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக முதல்வர் பதிவுமூப்பு அடிப்படையில் எங்களுக்கு பணி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.