உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நங்குடி சிவசக்திவேலர் கோவில் கும்பாபிேஷகம்

நங்குடி சிவசக்திவேலர் கோவில் கும்பாபிேஷகம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடியில் அருள் அருள் சிவசக்திவேலர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.நங்குடி கிராமத்தில் உள்ள அருள் அருள் சிவசக்திவேலர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.முன்னதாக நேற்று முன்தினம் முதல் சிறப்பு யாகம், பூஜைகள் நடந்தது. மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் முதல்கால வேதிகா அர்ச்சணை, தீபாராதனை, நடந்தது.அதனை தொடர்ந்து நேற்று காலை 6.00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம் சாமிக்கு உயிரூட்டுதல், திராவியாஹூதி ஹோமம், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது.7.30 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பாடாகி 8.30 மணிக்கு விமான கலசத்தில் புனித கங்கை நீர் ஊற்றி கும்பாபிேஷகம், 8.45 மணிக்கு மூலவர் அருள்அருள்சிவசக்திவேலர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை