| ADDED : ஆக 11, 2024 06:48 AM
நெய்வேலி : என்எல்.சி., குழுமம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ. 566.69 கோடி நிகர லாபம் ஈட்டி புதிய சாதனை புரிந்துள்ளது.நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவன குழுமத்தின் நடப்பு நிதியாண்டின் (2024--2025), முதல் காலாண்டுக்கான இயக்குனர்கள் குழுக் கூட்டம், சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் நடந்தது. கூட்ட முடிவில், நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் நிதிநிலை செயல்பாடுகள் வெளியிடப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது:என்.எல்.சி., குழுமம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 61.67 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. மின் உற்பத்தி 6,133.67 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி, 547.13 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. துணை நிறுவனங்கள் அடங்கிய குழுமத்தின் மொத்த மின் உற்பத்தி 7,554.08 மில்லியன் யூனிட் ஆக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வரிக்கு பிந்தைய லாபமாக ரூ. 495.98 கோடியை ஈட்டியது. வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 730.54 கோடியை ஈட்டி, 49.83 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.இந்த காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 2,901.53 கோடியாகும். துணை நிறுவனங்களையும் சேர்த்து வரிக்கு பிந்தைய லாபமாக ரூ. 566.69 கோடியை ஈட்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.