உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய வகுப்பறை கட்டடம்: எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

புதிய வகுப்பறை கட்டடம்: எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

கடலுார்: கடலுார் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு 1.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 4 வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டப்பட்டது. புதிய வகுப்பறை கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., புதிய கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.ஊராட்சி தலைவர் மனோகர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார்.விழாவில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சித் தலைவர் முத்துக்குமாரசாமி,துணைத் தலைவர் முருகன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் உமா பாஸ்கரன், நிர்வாகிகள் அஞ்சாபுலி, பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை