உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேத்தியாத்தோப்பில் நுால் வெளியீட்டு விழா

சேத்தியாத்தோப்பில் நுால் வெளியீட்டு விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு தமிழ் மன்றம் சார்பில், அவ்வை ஆத்திசூடியின் 109 படைப்பாளர்கள் உலக சாதனை நுால் வெளியீட்டு விழா நடந்தது.சேத்தியாத்தோப்பு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்மன்ற நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தமிழ்மன்ற நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன் வரவேற்றார். புதுச்சேரி தமிழ்ச்சங்க தலைவர் முத்து, உலக சாதனை நுாலை வெளியிட்டு பேசினார். கடலுார் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அன்பரசி, நுாலை பெற்று படைப்பாளர்களுக்கு விருதுகள், சான்றுகள் வழங்கினார்.முன்னதாக சிவயோக நடனம் ஆடிய டாக்டர் சுபானு மணிவண்னனுக்கு சிவயோக நடன செம்மல் விருது வழங்கப்பட்டது.அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் இதயகீதம்ராமனுஜம், மயிலாடுதுறை ஏ.டி.எஸ்.பி., சிவசங்கர், திருவையாறு அவ்வை கோட்டம் கலைவாணன், ஜெயவர்மன் அஜயன், ஞானி அஜயன், டில்லி தமிழ்ப்பேராசிரியர் ஆனந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நுால் தொகுப்பாசிரியர் கவிஞர் ஜெயந்திஆனந்தன் ஏற்புரையாற்றினார்.ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், அருள்ஞானப்பிரகாசம், கோபிநாதன், பன்னீர்செல்வம், பொன்மூர்த்திகன், பாண்டித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை