உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெருங்கடல்கள் தின ஓவியப்போட்டி

பெருங்கடல்கள் தின ஓவியப்போட்டி

கடலுார் : உலக பெருங்கடல்கள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களிடையே ஓவியப்போட்டி நடந்தது.கடல் வளங்களை பாதுகாக்க, ஆண்டு தோறும் ஜூன் 8ம் தேதி உலக பெருங்கடல்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் சாரல் அறக்கட்டளை ஆகியவை இணைந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டாக்டர் இளந்திரையன் பங்கேற்று கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என, பேசினார். நடந்த போட்டியில் 75க்கும் மேற்பட்ட குழந்தைகள் உலகப் பெருங்கடல்கள், சுற்றுச்சூழல் சார்ந்த ஓவியங்களை வரைந்தனர். அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவியர் மனோகரன், மிலிட்டரி பாபு, சிவக்குமார், யோகா மாஸ்டர் விஜய் கலந்து கொண்டனர். சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை