உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இறையூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 65. கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் அருகே வீட்டிற்கு சைக்கிளில் சென்றார்.அவ்வழியே வந்த பைக் (டி.என். 91 - ஆர்.0658) சைக்கிள் மீது மோதியது. படுகாயமடைந்த ஆறுமுகம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி