உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது.நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர் செய்கின்றனர். வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க நெல்லிக்குப்பத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதன்பேரில் நேற்று நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் ராமானுஜம் முன்னிலையில் தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் நெல் கொள்முதலை துவக்கி வைத்தார்.வி.சி., கட்சி நகர செயலாளர் திருமாறன், தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, ராஜாராம், மாவட்ட பிரதிநிதிகள் வேலு, வீரமணி, கதிரேசன், விவசா யிகள் ராமலிங்கம், எத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ