உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் சிதம்பரத்தில் பழனிசாமி பங்கேற்பு

அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் சிதம்பரத்தில் பழனிசாமி பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ள இடத்தினை அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பார்வையிட்டனர். சிதம்பரம் பைபாசில் ெஹலிபேடு மைதானம் அருகில் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நாளை மறுநாள் 31ம் தேதி நடக்கிறது. முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார்.இதற்காக பொதுக்கூட்ட மைதானம் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அப்பணிகளை மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் பார்வையிட்டு, மேடை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், காணுார் பாலசுந்தரம், நிர்வாகிகள் குமார், சரவணன், நகர துணை தலைவர் அரிசக்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை