உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது.கோவிலில், பங்குனி உத்திரவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் நடந்தது.தொடர்ந்து, 6:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் தேரில் எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, உற்சவ மூர்த்திகள் மணிமுக்தாற்றில் எழுந்தருளியதும் பால்குடம், காவடி சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி